பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-04 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட சுமைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் வந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் டி.தங்கவேல் தலைமை தாங்கினார்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முடிவுப்படி 50 கிலோவுக்கு மேல் சுமப்பது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.


தொழிலாளர்களால் உருவாக்கப்பட்டு உள்ள ‘ஸ்டேட்டஸ் கோ’ ஒப்பந்தத்தை முதலாளிகளும், அதிகாரிகளும் பலவீனப்படுத்த செய்யும் முயற்சிக்கு எதிராக ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் பாட்டாளி சுமை தூக்கும் மத்திய தொழிற்சங்கத்தின் துணைத்தலைவர் ஆறுமுகம், பாஸ்கர், சுமைப்பணியாளர்கள் சங்க செயலாளர் ரங்கநாதன் மற்றும் ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்