புதுமாப்பிள்ளை வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குளச்சல் அருகே புதுமாப்பிள்ளை வீட்டில் கதவை உடைத்து 13 பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
குளச்சல்,
குளச்சல் அருகே உள்ள பனவிளை றாவிளை பகுதியை சேர்ந்தவர் டேவிட்ராஜ் (வயது 30). இவருக்கும், றாவிளையின் அடுத்த பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புதுமாப்பிள்ளையான டேவிட்ராஜ் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சுகன்யா தனது கணவரின் தாயாருடன் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் சுகன்யாவின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை நெய்யூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை கேள்விப்பட்ட சுகன்யா நேற்று முன்தினம் தந்தையை பார்ப்பதற்காக நெய்யூர் சென்றார். இதனால் டேவிட்ராஜின் தாயார், அப்பகுதியில் உள்ள மற்றொரு மகனின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
பின்னர், நேற்று காலை வீடு திரும்பிய சுகன்யா கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது, வீட்டில் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. மேலும், பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகை கொள்ளை போயிருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று 13 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சுகன்யா குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்.
புதுமாப்பிள்ளை வீட்டில், மர்மநபர்கள் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.