சாந்தாகுருசில் சாலையின் குறுக்கே இருக்கும் இரும்பு சட்டத்தில் மாடி பஸ் மோதி விபத்து பயணிகள் உயிர் தப்பினர்
சாந்தாகுருசில் சாலையின் குறுக்கே இருக்கும் இரும்பு சட்டத்தில் மாடி பஸ் மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினர்.
மும்பை,
சாந்தாகுருசில் சாலையின் குறுக்கே இருக்கும் இரும்பு சட்டத்தில் மாடி பஸ் மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினர்.
இரும்பு சட்டத்தில் மோதிய பஸ்
மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள மேற்கு சாலையின் ஒரு பாதையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அந்த சாலையின் குறுக்கே ராட்சத இரும்பு சட்டம் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், நேற்று பாந்திராவில் இருந்து கலினா நோக்கி சென்று கொண்டிருந்த மாடி பஸ் ஒன்று அந்த வழியாக வந்தது.
பஸ் டிரைவர் இரும்பு சட்டம் இருப்பதை கவனிக்காமல் வேகமாக ஓட்டி வந்தார். இதன் காரணமாக மாடி பஸ்சின் மேல் பகுதி இரும்பு சட்டத்தின் மீது பயங்கரமாக மோதியது.
பயணிகள் உயிர் தப்பினர்
இதில் பஸ்சின் மேற்கூரை அப்பளமாக நொறுங்கியது. இரும்பு சட்டத்தில் மோதிய போது, ஏற்பட்ட பயங்கர சத்தம் கேட்டு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்தின் போது, பஸ்சின் மாடியில் ஒரு சில பயணிகளே இருந்து உள்ளனர். அவர்கள் லேசான காயம் அடைந்தனர். விபத்தை தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பதறி அடித்து கொண்டு கீழே இறங்கினார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார் பஸ் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.