எய்ம்ஸ் மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 701 பணிகள்

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் அதிகாரி மற்றும் உதவி பேராசிரியர் பணிகளுக்கு 701 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.;

Update: 2018-07-03 05:41 GMT
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்ற அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் நர்சிங் அதிகாரி பணிக்கு 551 பேரும், உதவி பேராசிரியர் பணிக்கு 150 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 701 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

நர்சிங் அதிகாரி பணி

நர்சிங் அதிகாரி பணிக்கு மொத்தம் 551 இடங்கள் உள்ளன. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 279 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 149 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 82 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 41 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

ஜெனரல் நர்சிங் மிட்வைபரி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள், பி.எஸ்சி. நர்சிங், பி.பீ.பீ.எஸ்.சி. (நர்சிங்) படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இவர்கள் நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு சேர்க்கப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது.

இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 12-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

இதற்கான எழுத்துத் தேர்வு 16-9-2018-ந் தேதி நடக்கிறது.

உதவி பேராசிரியர்

மற்றொரு அறிவிப்பின்படி புதுடெல்லி எய்ம்ஸ் கிளையில் உதவி பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை மருத்துவ படிப்புடன், ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கும், முதுநிலை நர்சிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் விரிவுரையாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100-ம் மற்றவர்கள் ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 9-7-2018-ந் தேதியாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 24-7-2018-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.aiims.edu/en.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்