கப்பல் தளத்தில் அப்ரண்டிஸ் வேலை
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பழுதுபார்க்கும் பணிமனை ஒன்று செயல்படுகிறது.
அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு தற்போது இந்த பணிமனையில் விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 128 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மெஷினிஸ்ட், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், பிட்டர், ரெப்ரிஜிரேட்டர் அண்ட் ஏ.சி. மெக்கானிக், எலக்ட்ரோபிளேட்டர், வெல்டர், பெயிண்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், டர்னர், மெக்கானிக் மோட்டார் வெகிகிள் மற்றும் சி.ஓ.பி.ஏ. பவுண்டரிமேன் மற்றும் பிளம்பர் போன்ற பிரிவில் பணிகள் உள்ளன. இவற்றில் பவுண்டரிமேன் மற்றும் பிளம்பர் பணிக்கு மட்டும் 2 ஆண்டு பயிற்சி பெறலாம். மற்றவை ஓராண்டு கால பயிற்சிப் பணியாகும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-10-2018-ந் தேதியில் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
10-ம் வகுப்பில் (மெட்ரிக்) 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 65 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 24-7-2018-ந் தேதியாகும். அப்ரண்டிஸ் பயிற்சி அக்டோபர் 15-ந் தேதி தொடங்குகிறது. இது பற்றிய விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள் https://www.indiannavy.nic.in/content/naval-ship-repair-yard-kochi என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.