கார் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர் பலி
மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன அதிகாரிகள் 2 பேர் பலியானார்கள்.
மும்பை,
மும்பையை சேர்ந்தவர் விஷால்(வயது27). இவர் ரத்னகிரி சிப்லுன் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தில் மனிதவள மேலாண்மை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்தின் அருகிலேயே வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை விஷால் உடன் பணியாற்றும் மேலாளர் கிரிஷ், நிர்வாக அதிகாரிகள் ராஜேஷ், ராகேஷ் ஆகியோருடன் காரில் கேட் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.
மும்பை- கோவா நெடுஞ்சாலையில் கேட் தாலுகா, தாபில் கிராம பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் அதில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் அதிகாரிகள் விஷால், கிரிஷ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த மற்ற 2 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய டேங்கர் லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.