வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்
வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 19 பெண்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்பாடி,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
காட்பாடி ரெயில் நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு ரெயில் மறியலில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பாக இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி காட்பாடி தாலுகா செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் ஆகியோர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தடுப்புகளை தாண்டி ரெயில் நிலையத்துக்குள் நேற்று காலை சென்றனர். அந்த நேரத்தில் அவர்கள் 3-வது பிளாட் பாரத்தில் கோவையில் இருந்து சென்னையை நோக்கி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ரெயில் மறியலில் ஈடுபட்ட 75 பேரை காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, அரக்கோணம், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர் உள்பட 6 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 19 பெண்கள் உள்பட மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.