திருச்சியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது
திருச்சியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கியது.
திருச்சி,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை இரவு திருச்சியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரில் பல இடங்களிலும் தாழ்வான பகுதிகளில் எல்லாம் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற தண்ணீரில் ஒரு கார் சிக்கிக்கொண்டது. இதனால் சுரங்கப்பாதையில் போக்கு வரத்து தடை பட்டது.
இந்நிலையில் நேற்று காலையில் இருந்தே திருச்சியில் வெயில் கொளுத்தியது. மாலை 6.30 மணி அளவில் திடீர் என வானில் கருமேகங்கள் திரண்டு வந்தன. சற்று நேரத்தில் அந்த மேகக்கூட்டங்கள் மழைநீரை பொழிய தொடங்கின. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த பலத்த மழையினால் மேலப்புதூர் சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் முதலியார் சத்திரம், குட்ஷெட் பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.
ஜங்ஷன் ரவுண்டானா, கண்டோன்மெண்ட் அய்யப்பன் கோவில், தில்லைநகர் மற்றும் உறையூர் சாலை ரோடு பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு மேலும் மழை விடவில்லை. தூறிக்கொண்டே தான் இருந்தது. திருச்சியில் அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் தரை குளிர்ந்து இதமான காற்று வீசியது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முசிறி, தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.