கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரெயில் மறியலுக்கு முயன்ற 61 பேர் கைதாகி விடுதலை
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரெயில் மறியலுக்கு முயன்ற 61 பேரை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
திருச்சி,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை எதிர்த்தும், வன்கொடுமை சட்டத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் இயற்றிட வேண்டும், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அறிவித்திருந்தனர்.
திருச்சியில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மறியல் பேராட்டம் நடைபெறும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்திருத்தனர். அதன்படி ரெயில் மறியலில் ஈடுபட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் வரதராஜன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜா, ஆதித்தமிழர் பேரவையினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஜங்ஷன் ரவுண்டானா அருகே நேற்று காலை திரண்டனர். கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகிகள் பேசினர்.
அதைத்தொடர்ந்து ரெயில் நிலையம் நோக்கி ரெயில் மறியல் செய்ய கோஷமிட்டப்படி புறப்பட்டு சென்றனர். நுழைவு வாயிலுக்கு முன்பாக இரும்பு தடுப்பு கம்பிகள் மூலம் போலீசார் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர். மேலும் போலீசார் கயிறு கட்டி போராட்டக்காரர்களை தடுத்தனர்.
அப்போது சிலர் போலீசாரை தாண்டி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதனைதொடர்ந்து ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர். இதில் 14 பெண்கள் உள்பட மொத்தம் 61 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் திருச்சியை அடுத்த கொள்ளிடம் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயிலை மறிக்க வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் சிலர் கடலூரில் இருந்து திருச்சி வந்த பயணிகள் ரெயிலை மறித்து, மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை கொள்ளிடம் போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ரெயில் மறியலால் பயணிகள் ரெயில் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.