பள்ளிக்கூட மினிபஸ் தாறுமாறாக ஓடி 3 ஆட்டோ-மொபட்டுகள் மீது மோதியது 2 பேர் பலி-5 பேர் படுகாயம்
கோவில்பட்டியில் பள்ளிக்கூட மினிபஸ் தாறுமாறாக ஓடி 3 ஆட்டோ, மொபட்டுகள் மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான மினிபஸ் நேற்று காலையில் வழக்கம்போல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றது. அந்த மினிபஸ்சை கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்த மரியதாஸ் (வயது 66) ஓட்டிச் சென்றார். அதில் சுமார் 30 மாணவ-மாணவிகள் இருந்தனர்.
அந்த மினி பஸ், கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் தலைமை தபால் நிலையம் அருகில் சென்றபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கு சாலையோரம் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டு இருந்த 3 ஆட்டோக்களிலும், அந்த வழியாக சென்ற 2 மொபட்டுகள், ஒரு சைக்கிள் மற்றும் சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் மீதும் அடுத்தடுத்து மோதி விட்டு மினிபஸ் நின்றது. உள்ளே இருந்த மாணவ, மாணவிகள் அலறி துடித்தனர்.
கண்மூடி திறப்பதற்குள் நிகழ்ந்த இந்த தொடர் விபத்துகளால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அலறியடித்தவாறு ஓடினர். மினி பஸ் மோதியபோது, ஆட்டோ ஸ்டாண்டில் சில டிரைவர்கள் நாளிதழ் படித்து கொண்டிருந்தனர்.
மினி பஸ் மோதியதில் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் மேற்கு காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தங்கராஜ் (40) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு ஆட்டோ டிரைவரான கோவில்பட்டி அருகே அச்சங்குளத்தைச் சேர்ந்த மாரிமுத்து (44) படுகாயம் அடைந்தார். மேலும் மினி பஸ், சைக்கிளில் மோதியதில் கோவில்பட்டி சவுந்திரபாண்டியன் தெருவைச் சேர்ந்த பெட்டிக்கடைக்காரர் கோவிந்தராஜ் (45) படுகாயம் அடைந்தார். இதேபோல் 2 மொபட்டுகளில் மோதியதில் கட்டிட தொழிலாளர்களான கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பைச் சேர்ந்த செல்வகுமார் (37), கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (49) ஆகியோரும், சாலையோரத்தில் நடந்து சென்ற விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்த மாரிச்சாமி (46), கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (30) ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த கோவிந்தராஜ், மாரிமுத்து, செல்வகுமார், கண்ணன் ஆகிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம் அடைந்த மாரிச்சாமி, சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விபத்தில் இறந்த தங்கராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான தங்கராஜிக்கு மாரியம்மாள் (38) என்ற மனைவியும், பிரியா (16), மரியசெல்வி (13), தர்ஷினி (12) ஆகிய 3 மகள்களும், ரமேஷ் (12) என்ற மகனும் உள்ளனர்.
கோவிந்தராஜிக்கு தேன்மொழி (38) என்ற மனைவியும், வேணீஸ்வரி (13), சினேக பிரியதர்ஷினி (10) ஆகிய 2 மகள்களும், பத்திரகாளி ராஜா (5) என்ற மகனும் உள்ளனர்.
விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளிக்கூட மினி பஸ் டிரைவரான மரியதாசை கைது செய்தனர்.
இந்த விபத்தில் மினி பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.