மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 350 பேர் கைது
மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
உச்சநீதிமன்றத்தின் வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்தத்தை கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்கிற அவசர சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி மதுரையில் ரெயில் மறியல் போராட்டத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் பெரியார் பஸ் நிலையம் அருகே கூடினார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆதிதமிழர்பேரவை, ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் கோஷம் போட்டு கொண்டே ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அங்கு ரெயில் நிலையத்திற்குள் உள்ளே நுழைந்து விடாதபடி போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உடனே போராட்டக்காரர்கள் சிலர் தடுப்புகளை தாண்டி ரெயில் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதைதொடர்ந்து போராட்டக்காரர்கள் ரெயில் நிலையம் முன்புள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மறியலுக்கு ரெயில் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சம்பத், மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரவன் உள்பட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.