2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதே பிரதமர் மோடியின் கனவு, மத்திய மந்திரி பேச்சு
விவசாயிகளின் வருவாயை வருகிற 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதே பிரதமர் மோடியின் கனவாகும் என்று ராமேசுவரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார்.
ராமேசுவரம்,
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி ராதாமோகன்சிங் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்திருந்தார். நேற்று காலை ராமநாதசாமி கோவிலுக்கு சென்று சாமி-அம்பாளை தரிசனம் செய்தார். பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை சென்று பார்வையிட்டார். அதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் ஹயாத் ஓட்டலில் கடல் மீன்வளம் குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மத்திய மந்திரி ராதாமோகன்சிங் தலைமை தாங்கினார். மத்திய மந்திரிகள் கஜேந்திரசிங் செகாவத், சுஷ்மாராஜ், வர்ஷோத்தம் ருபாலா, அர்ஜூன்லால் மேக்வால், பொன்.ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரப்பா, ஹரி, கமலாதேவ் பாட்டீல், குந்சல் ரோப்மால் நாகர், சஞ்சய்ஹரி, பேர்ச்மாண்டல், அர்ஜூனன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகர் பிரதான், இணை செயலாளர் கணேஷ்குமார், தேசிய மீன்வளர்ச்சி கழக முதன்மை அதிகாரி ராணி குமுதினி, முதன்மை செயலர் கோயல், மீன்துறை இயக்குனர் சமீரன், வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை உற்பத்தி முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, மீன்வள ஆணையாளர் பால்பாண்டி, மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முடிவில் மத்திய மந்திரி ராதாமோகன் சிங் பேசியதாவது:- மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கடல் மீன் வளம் தேசிய கொள்கையை அறிவித்துள்ளது. இந்த கொள்கை அடுத்த 10 ஆண்டுகளுக்கான மீன்வள மேம்பாட்டை நெறிப்படுத்தும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான படகுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளுக்கு 50 சதவீதமான ரூ.40 லட்சம் மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இது மீனவர்களின் வாழ்க்கை தரம் உயருவதற்கான நடவடிக்கை. மீன்துறை மற்றும் வேளாண்மை துறை குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு முதல் கட்டமாக ரூ.312 கோடி ஒதுக்கப்பட்டுஉள்ளது. இந்தியாவில் மீன் உற்பத்தி 1.14 கோடி டன்னாக மதிப்பிடப்பட்டுஉள்ளது. இதில் 68 சதவீதம் உள்நாட்டு மீன்வளத்துறைகளில் பதிவு செய்யப்பட்டுஉள்ளதாகவும், எஞ்சிய 32 சதவீதம் கடல் பகுதிகளில் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் உள்நாட்டு மீன் தேவை 1.5 கோடி டன்னாக இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கரையோர பகுதிகளில் கூடுதல் மீன் உற்பத்திக்கு மிக குறைவான வாய்ப்புகளே உள்ளன என்பதை கருத்தில் கொண்டு அரசு கடல் மீன் வளத்தை மேம்படுத்த முடிவு செய்தது. சிறந்த கூண்டு மீன்பிடிப்பு மீன் பண்ணை தொழிலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடல் அலைகள் குறைவாக உள்ள பகுதிகளில் இந்த முறை கையாளப்படும்.
விவசாயிகளின் வருவாயை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவது என்ற பிரதமர் மோடியின் கனவை நனவாக்கும் வகையில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கத்தை கடந்த மாதம் ஜூன் 1-ந்தேதி தொடங்கி ஜூலை 31-ந்தேதி வரை நடத்துகிறது. இந்த இயக்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு அவர்களது வேளாண்மை உற்பத்தியை மேம்படுத்தி வருவாயை உயர்த்துவதற்கு ஆலோசனை வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மீன்வளத்துறை, விவசாயத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மத்திய மந்திரிகளை பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில துணை தலைவர் வக்கீல் குப்புராமு, மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக், நகர் தலைவர் ஸ்ரீதர் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர்.