மத்தியில் ஆளும் மதவாதிகளை தூக்கி எறிய வேண்டும் - கனிமொழி எம்.பி. ஆவேசம்
மத்தியில் ஆளும் மதவாதிகளை தூக்கி எறிய வேண்டும் என்று புதுச்சேரியில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழா கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. பேசினார்.
புதுச்சேரி,
தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா கருத்தரங்கு புதுவை கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்கலிகளை வழங்கி பேசினார்.
முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், நூர்ஜகான்பேகம், விஜயா தாயன்பன், காஞ்சனா கமலநாதன், புதுவை மாநில தி.மு.க. தெற்கு அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. செயல்திட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ.பாலபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
கருணாநிதி தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர். அவருடைய குடும்பத்தை ஒரு புகைப்படத்தில் அடக்கிவிட முடியாது என்பார். அதற்கு காரணம் தமிழகத்தில் உள்ள அனைவரும் அவருடைய உடன்பிறப்புகள் என அடிக்கடி கூறுவார்.
ஜனாதிபதி, கவர்னர் பதவிகள் நியமன பதவிகளாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக அவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பரிந்துரைகள்படி அவர்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுவை கவர்னர் கிரண்பெடியால் புதுச்சேரி மாநில வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா இந்து, இந்தி, இந்துஸ்தானை உருவாக்க முனைப்புக்காட்டி வருகிறது. அதன்படி நடந்தால் சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள், பெண்கள் ஆகியோர் அடிமைகள் ஆக்கப்படுவார்கள். எனவே மத்தியில் ஆளும் மதவாதிகளை தூக்கி எறிய வேண்டும். நமது உரிமைகள் நிலைபெற மத்தியில் ஆட்சிமாற்றம் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், ‘கருணாநிதி பன்முக திறமை கொண்டவர். இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பிரச்சினைகள் என்றால் முதலாவதாக குரல் கொடுக்கும் தலைவர். பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கடந்த 4 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனம் செய்து வருகிறது. இந்த நிலை இன்னும் 6 மாதத்திற்குள் மாறும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மலரும்’ என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், ‘ஆண்களும், பெண்களும் சரிசமம் என்பதை பெரியார் வழியில் வலியுறுத்தி வந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில்தான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் இந்தியா 4-வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைக்குனிவாகும். மதவாத சக்திகளை விரட்டியடிக்கும் பொறுப்பு மகளிருக்கு உண்டு. என்றார்’ இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில மகளிரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக குமரி விஜயகுமார் வரவேற்றார். முடிவில் கவிஞர் சல்மா நன்றி கூறினார். விழாவுக்கு முன்னதாக திரைப்பட இசை அமைப்பாளர் தாயன்பன் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது.
அதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு 31.24 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் பயனடைவார்கள். சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்தில் மக்களின் கருத்தை கேட்காமல் அரசு செயல்பட்டு வருகிறது’ என்றார்.