ஓசூர் அருகே பிரபல ரவுடி கடத்தி கொடூர கொலை
ஓசூர் அருகே பிரபல ரவுடியை கடத்திய கும்பல் கொடூரமாக கொலை செய்து உடலை வீசி சென்றது.
ஓசூர்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இதன் அருகே உள்ள மாயசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்த் (வயது 29). பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றிருந்தது.
அதே பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரும் ரவுடி ஆவார். ஜெயந்த்தும், சுனிலும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களுக்குள் பண விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் சமாதானம் ஆனதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு ஜெயந்த்தை சுனில் தரப்பினர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அத்திப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதில், சுனில் தரப்பினர் மீது புகார் தெரிவித்திருந்தனர். அதன் பேரில் அத்திப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்.ஒய்.ராஜேஷ் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அத்திப்பள்ளி அருகே தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜலட்டிகானப்பள்ளி என்ற இடத்தில் உள்ள தோப்பில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அத்திப்பள்ளி போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஜெயந்த் அங்கு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் சுமார் 45 இடங்களில் கத்திக்குத்துகள் விழுந்திருந்தன. மேலும் கண்ணாடி பாட்டிலால் உடலில் குத்தப்பட்டும், கை, கால்கள் உள்பட பல இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டும் இருந்தன. இதைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயந்த், சுனில் தரப்பினரிடைய ஏற்பட்ட மோதல் காரணமாக சுனில் கோஷ்டியினர் ஜெயந்த்தை காரில் கடத்தி சென்று கொன்று பின்னர், உடலை தோப்பில் வீசி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலையில் சுனில் உள்பட மொத்தம் 7 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று அத்திப்பள்ளி போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.