கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா: “ஆசிரியர்களை, மாணவர்கள் மதித்து நடக்க வேண்டும்”
“ஆசிரியர்களை, மாணவர்கள் மதித்து நடக்க வேண்டும்’’ என்று கோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் முதல்வர் ரான்சம் ரூத் எப்சிபா கூறினார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ–மாணவிகளுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டன. இதற்கான விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரான்சம் ரூத் எப்சிபா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
தினமும் மாணவ–மாணவிகள் தங்களுடன் படிக்கும் பிற மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் வணக்கம் தெரிவிக்க வேண்டும். இதே போல் ஆசிரியர்களுக்கும் வணக்கம் தெரிவிக்க வேண்டும். அதோடு மட்டும் அல்லாது ஆசிரியர்களை மாணவர்கள் மதித்து நடக்க வேண்டும். மாதா, பிதா, குரு மற்றும் தெய்வத்துக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
நாம் எதை விதைக்கிறோமோ? அதைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை ஒவ்வொரு மாணவரும் அறிந்து செயல்பட வேண்டும்.
மாணவர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாக கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிவிட்டால் வாழ்க்கை சீரழிந்துவிடும். மாணவர்கள் கல்லூரிக்கு வரும் போது கட்டாயம் தங்களது அடையாள அட்டை அணிந்து வர வேண்டும்.
காதில் கடுக்கன் அணிய கூடாது. சரியான நேரத்தில் கல்லூரிக்கு வரவேண்டும். ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் கூறி னார்.
விழாவில் பேராசிரியர்கள், பேராசிரியைகள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவ–மாணவிகளை மூத்த மாணவ–மாணவிகள் கைகொடுத்து வரவேற்றனர்.
இந்த கல்வி ஆண்டு முதல் இங்கு புதியதாக 4 பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. கலந்தாய்வுக்கு பிறகு மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கும்.