எல்பின்ஸ்டன்ரோடு - பரேல் இடையே கட்டப்பட்டு உள்ள புதிய நடைமேம்பாலம்
எல்பின்ஸ்டன்ரோடு - பரேல் இடையே கட்டப்பட்டு உள்ள புதிய நடைமேம்பாலம் சில நாட்களில் திறக்கப்படும் என மேற்கு ரெயில்வே அதிகாரி கூறினார்.
மும்பை,
மும்பையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மழை பெய்து கொண்டிருந்த போது, எல்பின்ஸ்டன்ரோடு - பரேல் ரெயில் நிலையங்களை இணைக்கும் குறுகிய நடைமேம்பாலத்தில் அதிகளவில் பயணிகள் திரண்டனர்.
அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.
இதையடுத்து ராணுவம் சார்பில் அங்கு நடைமேம்பாலம் கட்டி பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்படி இரண்டு ரெயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் 12 மீட்டர் நீளத்தில் அகலமான நடைமேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த புதிய நடைமேம்பாலத்தின் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.
இதுபற்றி மேற்கு ரெயில்வே தலைமை செய்தி தொடர்பு அதிகாரி ரவீந்தர் பாகர் கூறுகையில், “ எல்பின்ஸ்டன்ரோடு - பரேல் ரெயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டு உள்ள புதிய நடைமேம்பாலம் இன்னும் சில நாட்களில் திறக்கப்படும்” என்றார்.