தானே மருத்துவமனையில் டாக்டரை தாக்கிய 3 பேர் கைது

தானே சிவில் மருத்துவமனையில் டாக்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-01 22:45 GMT
தானே,

உல்லாஸ்நகரை சேர்ந்தவர் திகம்பர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவி பிரசவத்திற்காக தானே மாநகராட்சி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அந்த பெண் திடீரென வயிற்று வலியால் துடித்தார்.

இதை பார்த்து திகம்பர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிகிச்சை அளிக்க டாக்டரை அழைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் வருவதற்கு தாமதமானதாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த அவர்கள் அங்கு பணியில் இருந்த ஒரு டாக்டரை பிடித்து தாக்கி உள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட டாக்டர் தானே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டரை தாக்கிய விக்கி (வயது32), சாகர் பாட்டீல் (25) மங்கேஷ் (30) ஆகிய 3 பேரை ைகது செய்தனர். மேலும் தப்பி சென்ற திகம்பரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்பட்ட நாளில் டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் தானே மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்