பயங்கரவாதம் வேரூன்ற தொடங்கி விட்டது: தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
பயங்கரவாதம் வேரூன்ற தொடங்கி விட்டது. இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.;
நெல்லை,
பயங்கரவாதம் வேரூன்ற தொடங்கி விட்டது. இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
17 வரியினங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு ஜி.எஸ்.டி. வரி உருவாக்கப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்தி ஓராண்டு முடிவடைந்த நிலையில் அரசின் வருமானம் அதிகமாகி உள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதல் வரி வசூலாகி உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்ற தொடங்கி விட்டது.
தமிழக அரசு இதில் முழு கவனம் செலுத்தி பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும். முழுமையாக பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும். இல்லை என்றால் சரி செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசம் ஆகும். பயங்கரவாதிகளும் அரசு ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என செயல்பட தொடங்கி விடுவார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் போராட்டத்தை தூண்டி விட்டவர்கள் யார்? என்பதை தற்போது தெரிந்து கொண்டனர். இந்த ஆலை விஷயத்தில் ஆரம்ப நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்களை அ.தி.மு.க. அரசும், தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் கவனிக்க தவறிவிட்டன.
தூத்துக்குடியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைய வேண்டிய ஆலை 12 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. அந்த ஆலைக்கு அ.தி.மு.க. அரசு ஏன் அனுமதி அளித்தது? தி.மு.க. அரசு ஏன் ஆலையை திறந்து வைத்தது? இந்த பிரச்சினையால் பாதிக் கப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவது தொடர்பான நடவடிக்கையை மாநில அரசு கவனிக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய ஆஸ்பத்திரி கட்டுவதற்காக வந்த நிதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவல் குறித்து தெரியவில்லை. திட்டங்களுக்கான நிதி திருப்பி அனுப்பப்படுவது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். திறம்பட, நியாயமாக செயல்படக்கூடிய அதிகாரிகளுக்கு முழு ஆதரவு தரவேண்டியது அரசின் கடமை ஆகும்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் சரியாக செயல்படாத நேரத்தில் எதிர்கட்சி சிறப்பாக செயல்பட்டு தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும். எதிர்கட்சியாக தி.மு.க. தனது கடமையில் இருந்து தவறி உள்ளது. தி.மு.க. செயல்பாடு சரியில்லை. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.