ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி படுகாயம் டிரைவர் கைது
ஓடும் பஸ்சில் இருந்து கல்லூரி மாணவி தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அதையொட்டி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்,

லோயர்கேம்ப் பஸ்நிலையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஜிதா(வயது20). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து கம்பத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏறி லோயர்கேம்ப் நோக்கி வந்தார்.
கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் துர்க்கைஅம்மன் கோவில் அருகே வந்த போது முன்னால் சென்ற மோட்டார்சைக்கிளின் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
இதில் விஜிதா நிலை தடுமாறி ஓடும் பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதையொட்டி படுகாயம் அடைந்த அவரை பயணிகள் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ் உரசியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கம்பம் ஓடைத்தெருவை சேர்ந்த ராஜபாண்டி (21) என்பவர் லேசான காயம் அடைந்தார்.
அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருசநாடு பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் நாகமுத்து (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.