காட்பாடியில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவிக்கு அடி, உதை ஆட்டோ டிரைவர் கைது

காட்பாடியில், ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து, உதைத்து கொடுமைபடுத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2018-07-01 21:32 GMT


காட்பாடி,

காட்பாடியில், ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து, உதைத்து கொடுமைபடுத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்

காட்பாடி செங்குட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவருக்கும், அரக்கோணத்தை சேர்ந்த மோகனபிரியாவிற்கும் (28) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் ரஜினிகாந்த் தனது மனைவியிடம், அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 26-ந் தேதி ரஜினிகாந்த் ரூ.5 லட்சம் மற்றும் மோகனபிரியாவின் தந்தை வீட்டு பத்திரத்தை வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி உள்ளார். அதற்கு மோகனபிரியா மறுத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரஜினிகாந்த், மனைவியை சரமாரியாக அடித்து, உதைத்துள்ளார். இதற்கு ரஜினிகாந்த் தந்தை கோட்டீஸ்வரன், தாய் ரேவதி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மோகனபிரியா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரஜினிகாந்த், கோட்டீஸ்வரன், ரேவதி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்தை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக கோட்டீஸ்வரன், ரேவதி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்