திருச்சி அருகே அடுத்தடுத்து விபத்து: பெண் உள்பட 5 பேர் பலி; 10 பேர் படுகாயம்
திருச்சி அருகே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் பெண் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
துறையூர்,
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள சிட்டிலரையை சேர்ந்த பல குடும்பத்தினர், பெரம்பலூர் அருகே உள்ள குலதெய்வ கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள நேற்று காலை தனியார் பஸ், வேன், கார்களில் சென்றனர். அங்கு கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், சாமி தரிசனம் செய்து விட்டு மாலையில் அவர்கள் பெரம்பலூரில் இருந்து, துறையூர் வழியாக ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
இதில் ஒரு காரில் சிட்டிலரையை சேர்ந்த செல்லமுத்து(வயது 65), புஷ்பா(47), அசோக்(50), புஷ்பரஞ்சனி(40), புவனேஸ்வரி(40), கீர்த்தனா(23) ஆகிய 6 பேர் பயணம் செய்தனர். துறையூர் அருகே பெரம்பலூர் சாலையில் கார் வந்தபோது, துறையூரில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்ற லாரியும், காரும் மோதிக்கொண்டன.
இதில் காரில் இருந்த செல்லமுத்து, புஷ்பா, அசோக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். புஷ்பரஞ்சனி, புவனேஸ்வரி, கீர்த்தனா ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்லமுத்து உள்ளிட்ட 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோன்று தா.பேட்டையை அடுத்துள்ள மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 60). நேற்று துறையூரில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கணேசன், அவருடைய மனைவி கிருஷ்ணவேணி(55) மற்றும் மகாதேவி கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி(50), மீனாட்சி(27), பானுபிரியா(20), அழகன்(60), சபாபதி(70), நாகலட்சுமி(47) ஆகியோருடன் காரில் சென்றார். காரை அதே கிராமத்தை சேர்ந்த டிரைவர் மூர்த்தி(25) ஓட்டினார்.
தா.பேட்டை-துறையூர் மெயின்ரோட்டில் சக்கம்பட்டி அருகே வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தின் மீது மோதியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 8 பேரும் படுகாயமடைந்தனர்.
அவர்களை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களில் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிரைவர் மூர்த்தியும் இறந்தார். கிருஷ்ணவேணி உள்ளிட்ட 7 பேரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக துறையூர் மற்றும் நாமக்கல் தனியார் மருத்துவமனைகளுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசன், மூர்த்தி ஆகியோருடைய உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.