பவானிசாகர் அணை நீர்மட்டம் 77 அடியை எட்டியது
பவானிசாகர் அணை நீர்மட்டம் 77 அடியை எட்டியது.
பவானிசாகர்,
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சேறு சகதியும் 15 அடி போக மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறந்துவிடும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 832 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 77.32 அடியை எட்டியது. பவானி ஆற்றில் 200 கனஅடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
தொடர்ந்து மழைபெய்யும் பட்சத்தில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கூறினார்கள்.