பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில், பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.;

Update: 2018-06-30 23:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில், பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி பஸ்நிலையம், அரசு மருத்துவமனை வழியாக மாநகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. இதில், பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பாலித்தீன் பைகளை பயன்படுத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள் ளது. இதனை பயன்படுத்தினாலோ, வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்படும். பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் மளிகைக்கடை, உணவகங்கள், இறைச்சி கடைகளுக்கு செல்லும் போது பாலித்தீனுக்கு பதிலாக துணிப்பைகள், கூடைகள் அல்லது பாத்திரங்களை கொண்டு செல்லுங்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் மனோகர், நகர்நல அலுவலர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்