சேலம் மாவட்டத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சேலம் மாவட்டத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது.
சேலம்,
பெரியார் பல்கலைக்கழகத்தில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருளால் சமூகச் சீரழிவுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பதிவாளர் பேராசிரியர் மணிவண்ணன், முதன்மையர் கிருஷ்ணகுமார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பாலகுருநாதன், செல்வம், பிரைடு இயக்குனர் புவனலதா, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இளங்கோவன், திட்ட அலுவலர் ஹேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் மலையடிவாரம், சந்தைபேட்டை, பழைய எடப்பாடிரோடு, புதிய எடப்பாடி ரோடு வழியாக சென்றது. வழிநெடுக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது இந்த ஊர்வலத்தில் போலீசார் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
கொளத்தூர் போலீஸ் நிலையம் சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட மாணவ, மானவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
எடப்பாடியில் நடந்த ஊர்வலத்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
ஆட்டையாம்பட்டியில் ஊர்வலத்தை சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரநாராயணன் தொடங்கி வைத்தார். இதில் ஆட்டையாம்பட்டி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். புகை பிடிக்காதே, மது அருந்தாதே என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள மாணவர்கள் எடுத்து சென்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் நடந்த ஊர்வலம் ஆட்டையாம்பட்டி புதிய பஸ் நிலையம், ராசிபுரம் மெயின்ரோடு வழியாக போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதே போல தாரமங்கலத்தில் காவல்துறை மற்றும் செங்குந்தர் பள்ளி ஆகியவை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.