காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து கர்நாடகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை கர்நாடகம், தமிழகம் இடையே இருந்து வருகிறது.
இந்த பிரச்சினையில் காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இரு மாநிலங்களும் மேல்முறையீடு செய்தன. இதில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை சுப்ரீம் கோர்ட்டு குறைத்து தீர்ப்பு கூறியது. அதாவது தமிழகத்திற்கான நீர் ஒதுக்கீட்டு அளவை 192 டி.எம்.சி.யில்(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது. கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீர் ஒதுக்கப்பட்டது.
மேலும் இந்த தீர்ப்பை அமல்படுத்த ஒரு ‘ஸ்கீம்‘ வகுக்கும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. கர்நாடகம் தனது பிரதிநிதிகளை அனுப்பாத நிலையில் மத்திய அரசு அந்த அமைப்புகளை உருவாக்கியது. அதன் பிறகு கர்நாடகம் சார்பில் கடந்த 23-ந் தேதி காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினராக ராகேஷ் சிங், காவிரி நீர் ஒழுங்காற்று குழு உறுப்பினராக எச்.எல்.பிரசன்னா ஆகியோரை நியமித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. ஆனால் சட்ட ரீதியாக கர்நாடகம் தொடர்ந்து போராடும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து விவாதிக்க 30-ந் தேதி (அதாவது நேற்று) கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் பெங்களூரு விதான சவுதாவின் 3-வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா, நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா, மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா, முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, காவிரி வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் மோகன் காத்தரகி மற்றும் அவருடைய குழுவினர், மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் உதய்ஹொல்லா மற்றும் கர்நாடக எம்.பி.க்கள், காவிரி படுகையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
காலை 11.45 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மதியம் 1.45 மணிக்கு நிறைவடைந்தது. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தால் கர்நாடகத்திற்கு ஏற்படும் சாதக-பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காவிரி மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீர் கிடைத்தது. ஆயினும் கர்நாடக நலனுக்கு எதிராக சில விஷயங்கள் தீர்ப்பில் அமைந்துள்ளன. இதுகுறித்து இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதித்து அதன் பிறகு அமைத்து இருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை கர்நாடகத்துடன் ஆலோசனை நடத்தாமல் மத்திய அரசு அவசர கதியில் அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கக்கூடாது என்று நாங்கள் இருந்தோம்.
ஆனால் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது. இந்த ஆணையத்திற்கு தமிழகம் உள்பட 3 மாநிலங்களின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 2-ந் தேதி (அதாவது நாளை) நடக்கிறது. இதில் கர்நாடகத்திற்கு எதிராக முடிவு வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால், எதிர்ப்பை தெரிவித்து நாங்கள் 2 உறுப்பினர்களின் பெயர்களை அனுப்பி வைத்தோம். டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள்.
இதற்கு அனைத்துக்கட்சி கூட்டம் ஒப்புதல் வழங்கியது. கர்நாடகத்தின் நிலையை அவர்கள் கூட்டத்தில் தெரிவிப்பார்கள். கர்நாடகத்தின் நலனை காக்க நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராட கர்நாடகம் தீர்மானித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கட்சிகளின் தலைவர்கள், சட்ட நிபுணர் களின் ஆலோசனையை ஏற்று இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. (காவிரி விவகாரத்தில் ‘ஸ்கீம்‘ வகுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்துள்ளது. இதற்கு எதிராக இந்த மேல்முறையீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீட்டு மனுவை எந்தெந்த அம்சங்கள் அடிப்படையில் தயாரிப்பது என்பது குறித்து மூத்த வக்கீல் பாலி நாரிமன் உள்பட சட்ட நிபுணர்கள் ஆலோரித்து முடிவு செய்வார்கள். இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் நலனை காக்க கர்நாடகம் இறுதிவரை போராடும். மேலும் கர்நாடகத்தில் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 40 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகத்திற்கு எதிராக உள்ள அம்சங்களை குறிப்பிட்டு மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பார்கள்.
கட்சி பேதங்களை மறந்து 40 எம்.பி.க்களும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்று இந்த கூட்டத்தில் உறுதி அளித்துள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் முன்கூட்டியே விவாதித்து இருந்தால் அதன் நெறிமுறைகளில் திருத்தங்கள் செய்திருக்க வாய்ப்பு இருந்தது.
இதுகுறித்து பிரதமர், மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரி ஆகியோரை முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் சில வழிகாட்டு நெறிமுறைகளை நீக்க வேண்டும் என்றும் கூறினார். கர்நாடகத்தின் நலனுக்கு எதிரான அம்சங்களை நீக்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இதை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கும் முன்பே இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கர்நாடகம் கூறியது. ஆனால் மத்திய அரசு எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவை அமைப்பது குறித்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.
கர்நாடகத்தின் நலனை காக்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று கர்நாடகம் கேட்டுக்கொண்டது. அதையும் மத்திய அரசு செய்யவில்லை. வருகிற 2-ந் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகம் எடுத்து வைக்கும் வாதம் என்ன என்பது அன்றைய தினம் தெரியவரும். இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.