மணப்பாறையில் வங்கியில் பொம்மை துப்பாக்கிகள் இருந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை
மணப்பாறையில் உள்ள வங்கியில் பொம்மை துப்பாக்கிகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளை வழக்கில் கைதான முன்னாள் ஊழியர் வைத்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கோவில்பட்டி சாலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் பொருட்கள் வைக்கும் அறையை, நேற்று காலை வங்கியின் தூய்மை பணியாளர் அன்னத்தாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பிளாஸ்டிக் கவரில் 2 துப்பாக்கிகள் இருந்தன. மேலும், ரத்தம் என்று எழுதப்பட்ட ஒரு பாட்டிலும், மற்றொரு பாட்டிலும் அதில் இருந்தன.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் சிவசுப்பிரமணியத்திடம் தெரிவித்தார். அவர், அந்த துப்பாக்கிகளை பார்வையிட்டு வங்கி மேல் அதிகாரி மற்றும் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி மற்றும் போலீசார் வங்கிக்கு சென்று, அந்த துப்பாக்கிகளை கைப்பற்றி பார்த்த போது, அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. பின்னர் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தி விட்டு, துப்பாக்கிகள் மற்றும் பாட்டில்களை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
வங்கிக்குள் துப்பாக்கிகள் மற்றும் ரத்தம் என்று எழுதப்பட்ட பாட்டில்கள் எப்படி வந்தது?, அதைக்கொண்டு வந்து வைத்தவர்கள் யார்? அது எவ்வளவு நாட்களாக அங்கு இருந்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், இதே வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்த மரியசெல்வம் என்பவர், மன்னார்குடி அருகே உள்ள மெர்கண்டைல் வங்கியில் துப்பாக்கியை காட்டி பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் கைதானதும், அவர் பணியில் இருந்தபோது கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற பொம்மை துப்பாக்கியை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மணப்பாறையில் வங்கிக்குள் பொம்மை துப்பாக்கி இருந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.