காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை திருநாவுக்கரசர் பேட்டி

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என திருநாவுக்கரசர் கூறினார்.;

Update: 2018-06-30 23:15 GMT
செம்பட்டு,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், மேலும் 6 மாத காலத்திற்கு தனி அதிகாரிகளுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் 1½ லட்சம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளனர். உள்ளாட்சிகளுக்கு நிதி வராததால் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. போலீசார் ரத்த தானம் வழங்கியது பாராட்டுக்குரிய செயல். ஆனால் சில மாவட்டங்களில் போலீசார் வழங்கிய ரத்தத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லாமல், அட்டை பெட்டிகளில் வைத்து கொண்டு சென்றது கண்டிக்கத்தக்கது.

ராமசாமி படையாச்சி, சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்ததை வரவேற்கிறோம். சிலை கடத்தல் வழக்கில் போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சிலைகள் கடத்தல் வழக்கில் அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதில் பின்புலம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்து உண்மையை அரசு வெளிக்கொண்டு வர வேண்டும். பொன் மாணிக்கவேலை பணியிட மாற்றம் செய்யாமல் தொடர்ந்து அதே பணியில் நீடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் உறுப்பு தான மோசடியில் நீதிபதிகள் கொண்ட விசாரணை குழு தேவை.

ரூ.10 ஆயிரம் கோடியில் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலைக்காக 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அழிக்க வேண்டாம். மக்கள் எதிர்ப்பை மீறி பசுமை சாலை அமைக்க தேவை இல்லை. தற்போது உள்ள சாலைகளை மேம்படுத்தினால் போதும். மேலும் சாலைகள் இல்லாத கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கலாம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் திருச்சியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் திருநாவுக் கரசர் கலந்துகொண்டு பேசினார். 

மேலும் செய்திகள்