வேட்டவலத்தை சேர்ந்த பெண் காதல் திருமணம்: போலீஸ் நிலையம் முன்பு பெற்றோர் தீக்குளிப்பு
காதல் திருமணம் செய்த வேட்டவலத்தை சேர்ந்த மகளிடம் பேச அனுமதிக்காததால், செம்பட்டி போலீஸ் நிலையம் முன்பு பெற்றோர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்பட்டி,

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). அவருடைய மனைவி சசிகலா. இவர்களது மகள் கல்பனா (21). பி.எஸ்சி. பட்டதாரி. திருச்சி மாவட்டம் வீரலப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் செல்வராஜ் (24). பி.காம். பட்டதாரியான இவர், ஏழுமலை வீட்டின் எதிர்புறத்தில் தங்கியிருந்து நிதிநிறுவனம் நடத்தி வந்தார்.
இதனால் செல்வராஜூவும், கல்பனாவும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர்.
இதுபற்றி அறிந்த கல்பனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்தது. இதனை அறிந்த காதல்ஜோடி, கடந்த 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கல்பனாவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடி, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு நிலக்கோட்டை அருகே மாலைப்பட்டியில் உள்ள செல்வராஜூவின் சகோதரி அமுதா வீட்டில் அவர்கள் தங்கி இருந்தனர்.
இதற்கிடையே காதல்ஜோடியை போலீசார் தேடி வந்தனர். இதனால் பாதுகாப்பு கேட்டு, செம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பு பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கல்பனாவின் தந்தை ஏழுமலை, தாயார் சசிகலா ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது, அங்கிருந்த பெண் போலீஸ் ஏட்டுவிடம் தனது மகளிடம் பேச வேண்டும் என்று கல்பனாவின் பெற்றோர் கூறினர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் வந்த பிறகு கல்பனாவிடம் பேசலாம் என்றும், அதுவரை காத்திருக்குமாறும் பெண் போலீஸ் ஏட்டு கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்து கல்பனாவின் பெற்றோர் சென்று விட்டனர்.
பின்னர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்ற அவர்கள், ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கினர். அதைத்தொடர்ந்து மீண்டும் அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தனது மகளை பார்த்து பேசுவதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறி போலீஸ் நிலையம் முன்பு ஏழுமலை, சசிகலா ஆகியோர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர்.
இதனைக்கண்ட போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் ஓடிச்சென்று தீயை அணைத்தனர். இதில் அவர்களின் முகப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரன், செம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதற்கிடையே கல்பனாவையும், செல்வராஜையும் வேட்டவலம் போலீசில் ஒப்படைக்க செம்பட்டி போலீசார் முடிவு செய்துள்ளனர். மகளை பார்த்து பேச அனுமதிக்காத போலீசாரை கண்டித்து, போலீஸ் நிலையம் முன்பு பெற்றோர் தீக்குளித்த சம்பவம் செம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.