பொது செயல் திட்ட வரைவு அறிக்கை தாக்கல் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை
கூட்டணி ஆட்சியின் பொது செயல் திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்-மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று செயலாற்றி வருகிறார்கள். இந்த ஆட்சி சுமூகமாக நடைபெற வசதியாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு கூட்டத்தில், இந்த இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை ஒருங்கிணைத்து ஒரு பொது செயல் திட்டத்தை உருவாக்க வசதியாக அறிக்கை தயாரித்து வழங்க குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லி, மந்திரிகள் ஆர்.வி. தேஷ்பாண்டே, டி.கே.சிவக் குமார், எச்.டி. ரேவண்ணா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
அந்த குழு இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அம்சங்களை ஒருங்கிணைத்து ஒரு வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. அதுகுறித்த ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பொது செயல் திட்ட வரைவு அறிக்கை குழுவினர் வழங்கினர். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தலைவர்கள் விரிவாகவும், ஆழமாகவும் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு பின் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டத்தில், பொது செயல் திட்டத்தை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இன்று(அதாவது நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் வீரப்பமொய்லி, பொது செயல் திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பொது செயல் திட்டம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். இந்த கூட்டத்தில் மேலும் சில ஆலோசனைகள் கூறப்பட்டன. இந்த ஆலோசனைகள் குறித்து இன்று(அதாவது நேற்று) மாலை நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து தீர்மானிப்போம். அதன் பிறகு பொது செயல் திட்ட அறிக்கையை, கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தாக்கல் செய்து அதற்கு ஒப்புதல் பெறுவோம்.
ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்கப்படும் திட்டங் களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். முந்தைய ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் நிதி ஒதுக்குவது என்று முந்தைய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.
பட்ஜெட் தாக்கல் தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-மந்திரி குமாரசாமி இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் பொது செயல் திட்ட வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.