வீரதீர செயல்கள் புரிந்த குழந்தைகளுக்கு விருது கலெக்டர் தகவல்
வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
வேலூர்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்து மற்ற குழந்தைகளுக்கு முன் உதாரணமாக திகழும் 6 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் டெல்லி குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான தேசிய விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் மற்றும் முழு தகவல்களையும் www.iccw.co.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து இந்திய குழந்தைகள் நலச்சங்கம், தமிழ்நாடு, வேலூர் மாவட்ட கிளை, 5-வது கிழக்கு பிரதான சாலை, காந்திநகர், வேலூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.