சோளிங்கபுரத்தில் ரெயிலை மறித்து பயணிகள் போராட்டம்
சோளிங்கபுரம் ரெயில் நிலையத்துக்கு வரக்கூடிய 2 ரெயில்கள் காலதாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டது.
பனப்பாக்கம்,
ரெயிலில் செல்வதற்காக காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாற்று ரெயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் நோக்கி செல்லும் பயணிகள் ரெயில் தினமும் பாணா வரத்தில் உள்ள சோளிங்கபுரம் ரெயில் நிலையத்துக்கு மாலை 4.40 மணிக்கு வரும். அதேபோல வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் மாலை 6.05 மணிக்கு இங்கு வரும்.
இந்த 2 ரெயில்களுக்காக பாணாவரத்தை சுற்றியுள்ள மகேந்திரவாடி, அன்வர்த்திகான்பேட்டை, சித்தேரி உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பாணாவரம் பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களில் வேலை பார்க்கும் அலுவலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது உரிய நேரத்திற்கு வர வேண்டிய இரு ரெயில்களும் 2 மணிநேரம் காலதாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2 ரெயில்களுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்திற்கு சென்று, இந்த வழியாக செல்லும் ஏதாவது ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தி தங்களை ஏற்றி அனுப்புமாறு கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். அப்போது அங்கு அரக்கோணத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலை காத்திருந்த பயணிகள் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பாணாவரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இந்த ரெயில் தற்போது செல்லட்டும். பின்னால் வரும் ரெயிலில் உங்களை ஏற்றி அனுப்புவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ரெயில் சுமார் 15 நிமிடங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. பின்னர் இரவு 7 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை அதிகாரிகள் நிறுத்தி அதில் அவர்களை ஏற்றி அனுப்பினர். அதைத்தொடர்ந்து பெங்களூருவில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் 7.27 மணிக்கும், வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் 7.50 மணிக்கு சோழிங்கபுரம் ரெயில் நிலையத்துக்கு காலதாமதமாக வந்து சென்றது. இந்த ரெயில் மறியல் போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.