தொடர்ந்து கஞ்சா விற்றவர் 5-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து கஞ்சா விற்றவர் 5-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-06-29 22:16 GMT
கடத்தூர்,

கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் கீரிவாயன் என்கிற சந்தியாகு (வயது 54). இவர் கடந்த மாதம் 17-ந் தேதி கோபி ஒத்தக்குதிரை பகுதியில் நின்றுகொண்டு கஞ்சா விற்றதாக தெரிகிறது.

அந்த வழியாக ரோந்து சென்ற கோபி போலீசார் சந்தியாகுவை பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்கள்.

அதன்பின்னர் அவர் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சந்தியாகு ஏற்கனவே பலமுறை கஞ்சா விற்று போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். இதனால் 4 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்ததும் மீண்டும் அவர் கஞ்சா விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து சந்தியாகுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் பிரபாகர் சந்தியாகுவை 5-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்