சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2018-06-29 22:45 GMT
சேலம்,

சேலம் சின்னவீராணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகன் என்கிற பிரபு (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது வீட்டிற்கு, பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி அவ்வப்போது டி.வி. பார்க்க வருவது வழக்கம்.

கடந்த 9.12.2013 அன்று டி.வி. பார்க்க வந்தபோது அவரை வழிமறித்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து அவரது தந்தை வீராணம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி, குற்றம் சாட்டப்பட்ட பிரபுவுக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.52 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்