தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-06-29 22:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டை ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள கோவில் வீதிகள் மற்றும் சாலை ஓரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், குழந்தைகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் காற்றில் பறந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உடனடியாக அந்த பகுதியில் உள்ள சாலைகளில் இருக்கும் குப்பைகளை தினந்தோறும் அகற்றிடவும் குப்பைகளை கொட்டுவதற்கு கூடுதல் குப்பை தொட்டிகளை சாலையில் முறையான இடத்தில் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்