அனுமந்தன்பட்டியில், சாலையை சீரமைக்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-06-29 22:00 GMT

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அடுத்துள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 13 வார்டுகள் உள்ளன. இதில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 6, 7, 8–வது வார்டுகளில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இதிரீஸ்கான் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி செயல்அலுவலர் மோகன்குமார் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்