வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கைத்தறி நெசவாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கைத்தறி நெசவாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

Update: 2018-06-29 23:30 GMT
கரூர்,

வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கைத்தறி நெசவாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

தேசிய அளவில், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 4-வது தேசிய கைத்தறி கணக்கெடுப்பு பணி மாவட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் விடுபட்ட கைத்தறி நெசவாளர்கள் தாங்கள் உறுப்பினராக உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் ஆதார் கார்டு போன்ற உரிய ஆவணங்களை அளித்தும், தனியார் நெசவாளர்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகள் மூலமாக அருகில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

இந்த கணக்கெடுப்பின் மூலம் அடையாள அட்டை பெறும் நெசவாளர்களுக்கு மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி கிடைத்திட வழிவகை உள்ளது. மத்திய அரசின் வரையறைக்கு உட்பட்ட அனைத்து கைத்தறி நெசவாளர்களும் இந்த கணக்கெடுப்பின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை பெற கரூர் வெங்கமேடு வி.வி.ஜி.நகரில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல், உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது 04324 -223080 என்ற அலுவலக எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கரூர் கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் வெற்றிச்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்