தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி - அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் குற்றம்சாட்டினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் உரிமை மீட்பு வெற்றி விழா பொதுக்கூட்டம் பாலக்கோடு பஸ்நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் கே.வி.ரெங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ்,குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நகர செயலாளர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கோடு நகர செயலாளர் சங்கர் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செ.செம்மலை எம்.எல்.ஏ., தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன், தலைமைக்கழக பேச்சாளர் பவானி வாசன் ஆகியோர் கலந்து கொண்டு காவிரி நதிநீர் உரிமையை மீட்க அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட சட்டப்போராட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டி, வன்முறையை கட்டவிழ்த்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்து வருகின்றன. இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு நில அளவை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் அமைதியான ஆட்சியை நடத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இதனால் தி.மு.க. இனி எப்போதுமே தமிழகத்தில் ஆட்சிக்கு வராது. அ.தி.மு.க.வின் சாதனைகள் தொடர ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், முன்னாள் பேரவை மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ரவிசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.