ரூ.3¾ கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்களை ரூ.3¾ கோடியில் தூர்வாரும் பணியை ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) சங்கரநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பெரிய கருப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அதன் தலைவர் விசுவநாதன் தலைமையில் திடீர் என கலெக்டர் முன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பொய்த்து விட்டதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பெருவளை, பங்குனி, அய்யன், தெற்கு, உய்யகொண்டான் உள்ளிட்ட வாய்க்கால்களை குடிமராமத்து திட்டத்தின்கீழ் முறைகேடு இல்லாமல் தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி அப்போது அவர்கள் கோஷமிட்டனர்.
பாரதீய கிசான் சங்கம் மற்றும் அய்யன் வாய்க்கால் பாசனதாரர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் பேசுகையில் இந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 148 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு ரூ.317 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 1,846 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 86 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன் பேசியதாவது:-
தமிழ்நாடு பாசன மேம்பாட்டு திட்டம் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின்கீழ் உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 17 ஏரிகளும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் 36 ஏரிகள் என மொத்தம் 53 ஏரிகளை புனரமைக்கும் பணிகளும், அரியாறு வடிநில கோட்டத்தின்கீழ் மழைநீர் வரத்து வாய்க்கால்களை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2018-19ம் ஆண்டு பராமரிப்பு நிதியின்கீழ் ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பாசன வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள், வடிகால் போன்றவற்றில் விவசாயிகளின் கோரிக்கைகள் முன்னுரிமை அடிப்படையில் கட்டுமானங்களை புனரமைத்தல் மற்றும் வாய்க்கால்களை தூர்வாருதல் போன்ற 38 பணிகள் ரூ.3 கோடியே 9 லட்சத்திலும், அரியாறு வடிநில கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பாசன ஆதாரங்களில் 8 பராமரிப்புப் பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி திருச்சி மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால்கள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை வருகிற ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்கவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கலெக்டர் பேசுகையில் ‘சாகுபடிக்கு தேவையான உரங்கள், யூரியா 3,468 டன் டி.ஏ.பி. 2969 டன். பொட்டாஷ் 2,784 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 8,071 டன் அளவு கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறையின் மூலம் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின்கீழ் 2018-2019ம் ஆண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்தில் வழங்க அரசு ஆணை வழங்கியுள்ளது. நமது மாவட்டத்தில் 40 சோலார் மின் மோட்டார்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.