டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி
உத்தமபாளையம் அருகே டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணியின் போது திடீரென் மின் இணைப்பு கொடுத்ததால் மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலியானார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43). இவர் மார்க்கையன்கோட்டை துணைமின்நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று தே.சிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, கோடாங்கிபட்டி, பல்லவராயன்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று அறிவிப்பு செய்யப்பட்டு அதன்படி மின்தடை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கோடாங்கிபட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பெருமாள் ஏறி பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது மதியம் 1.30 மணியளவில் யாரோ தெரியாமல் திடீரென மின் இணைப்பை கொடுத்து விட்டனர்.
இதில் மின்சாரம் பாய்ந்து பெருமாள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் தோட்டங்களில் வேலை பார்த்து கொண்டு இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய பெருமாளை மீட்டு அருகில் உள்ள தே.சிந்தலைச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் பெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இந்தநிலையில் இறந்த பெருமாளின் உறவினர்கள், மின் தடை அறிவித்துவிட்டு திடீரென மதியம் மின்சார இணைப்பு கொடுத்தது ஏன்? என்றும் திட்டமிட்டு பெருமாளை கொலை செய்து விட்டனர் என்றும், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி தே.சிந்தலைச்சேரியில் நேற்று மாலை 4 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி போலீஸ் துணைசூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின் தடை செய்யப்பட்ட நேரத்தில் மின் இணைப்பு கொடுத்தது யார்? என்பதை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியலை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர். பின்னர் பெருமாளின் உடல் பிரேத பரிசோதனைக் காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த பெருமாளுக்கு ஈஸ்வரி(40) என்ற மனைவியும் ரஞ்சித்குமார்(21), மனோஜ்குமார் (19) என 2 மகன்களும் உள்ளனர்.