இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் இன்று கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-06-28 23:11 GMT
மும்பை,

மராட்டியத்தில் கடந்த வாரம் தொடங்கிய பருவமழை மும்பை, தானே உள்ளிட்ட நகரங்களில் பெருமளவில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இதன்காரணமாக மும்பை புறநகர் ரெயில்களின் தண்டவாளங்கள் நீரில் மூழ்ங்கி ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதுதவிர சாலைகளிலும் வாகனங்கள் தத்தளித்து செல்லும்நிலை காணப்பட்டது. இதையடுத்து மழைப்பொழிவு குறைந்தாலும் கடந்த திங்கட்கிழமை முதல் மாநிலத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது.இந்த நிலையில் மும்பையில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்தது.

இந்தநிலையில் மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று(வெள்ளிக்கிழமை) மும்பை மற்றும் தானே, பால்கர், ராய்காட் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

மேலும் பொதுமக்களும் மழைக்கால நோய்கள் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு எச்சரிக்கையாக இருக்கும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

மேலும் செய்திகள்