வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மதுபான நிறுவனத்துக்கு ரூ.6½ கோடி அபராதம்

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மதுபான நிறுவனத்துக்கு ரூ.6½ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2018-06-28 22:59 GMT
மும்பை,

அவுரங்காபாத்தில் லிலாசன்ஸ் என்ற மதுபான நிறுவனத்தின் ஆலை உள்ளது. இங்கு பீர் தயாரிக்கப்பட்டு மராட்டியம் மட்டும் இன்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு இந்த நிறுவனம் கலால் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

மேலும் அந்த நிறுவனம் விதிமுறை மீறி குஜராத் மாநிலத்தில் பீர் விற்பனை செய்ததாக கூறப்பட்டது.

மராட்டியத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க கலால் வரித்துறை மந்திரிக்கு அதிகாரம் உண்டு. எனவே லிலாசன்ஸ் நிறுவனம் மீதான குற்றச்சாட்டு குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே விசாரணை நடத்தினார். இதில், அந்த நிறுவனம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது.

இதையடுத்து மந்திரி சந்திரசேகர் பவன்குலே சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனத்திற்கு ரூ.6 கோடியே 49 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்