வேலைக்கார பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வங்கி அதிகாரி கைது

அந்தேரியில் வேலைக்கார பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-06-28 22:56 GMT
மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 18-வது மாடியில் வசித்து வருபவர் நித்தின். வங்கி அதிகாரி. இவரது மனைவி ஹினா. இவர்களது வீட்டில் ஜோதி (வயது18) என்ற இளம்பெண் வீட்டு வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் ஜோதி 18-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மேக்வாடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில், ஜோதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து ெகாண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

ஜோதியின் சொந்த ஊர் ரத்னகிரி ஆகும். நித்தின் வீட்டில் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக வேலை பார்த்து வந்தார். நித்தின் அவருக்கு 3 மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நித்தினும், அவரது மனைவியும் ஜோதிக்கு அதிக வேலை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், ஜோதி அவர்களது வீட்டில் நகைகளை திருடியதாக குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாகவே மனஉளைச்சல் அடைந்த ஜோதி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜோதியை தற்கொலைக்கு தூண்டியதாக நித்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்