ரெயிலில் பயணிகளிடம் பணப்பை பறித்த அண்ணன்-தம்பி கைது

ரெயிலில் பயணிகளிடம் பணப்பை பறித்த அண்ணன்-தம்பியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.;

Update: 2018-06-28 22:14 GMT
மும்பை,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சம்பவத்தன்று சர்ச்கேட் நோக்கி விரைவு மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் பாந்திரா ரெயில் நிலையம் வந்து நின்றபோது, ஒரு பெட்டியில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென பயணிகள் 2 பேரின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிஓடினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் இருவரும் திருட்டு ஆசாமிகள் இருவரையும் பிடிப்பதற்காக ரெயிலில் இருந்து இறங்கி விரட்டினர்.

அப்போது பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் இருவரையும் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

இதில், அவர்கள் சயானை சேர்ந்த நதீம் சேக் (வயது28), ஹைதர் சேக் (22) என்பதும், இருவரும் அண்ணன், தம்பி என்பதும் தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்கள் பயணிகள் இருவரிடமும் இருந்து பறித்த பணப்பையை பறிமுதல் செய்தனர். போலீசார் அண்ணன், தம்பி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்