நகராட்சியில் வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி நகராட்சியில் வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுந்தரக்கோட்டை,
மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சொத்து வரியை சதுரடி கணக்கில் பல மடங்கு உயர்த்த இருப்பதை கைவிட வேண்டும். கட்டிட வரி, குடிநீர் வரி, உற்பத்தி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். நகர விரிவாக்க அடிப்படையில் குடிநீர், பாதாள சாக்கடை, சாலைகள் மற்றும் சுகாதார வசதிகள் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை கண்டித்தும், வரியை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையர் நாகராஜனிடம் மனுவை அளித்தனர். இதில் நகர குழு உறுப்பினர்கள் கோபு, வேதரெத்தினம், சுப்பிரமணியன், தண்டபானி, பாப்பம்மாள், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு நகராட்சி வாசலில் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.