15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

நாகர்கோவில் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Update: 2018-06-28 22:15 GMT
கன்னியாகுமரி,

நாகர்கோவில் அருகே தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21), கூலி தொழிலாளி. இவர் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு பகுதியில் வேலைக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. காதலுக்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் அந்த சிறுமியை அழைத்து வந்து திருமணம் செய்து குடித்தனம் நடத்தினார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆனார். இதையடுத்து பரிசோதனை செய்ய ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர். அந்த பெண்ணிடம் வயதை கேட்ட போது, அவர் தனக்கு 15 வயதே ஆவதாக தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜேஷ் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அவரை கர்ப்பமாக்கியதாக ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக ராஜேசின் உறவினர்கள் அபிஷா, சரோஜா, சுதன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே ராஜேசும், அவரது உறவினர்களும் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்