குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து சுற்றுலா வேனில் வந்த வடமாநில தம்பதியை பிடித்த பொதுமக்கள்
இலுப்பூரில் குழந்தை கடத்தல்காரர்கள் என நினைத்து சுற்றுலா வேனில் வந்த வடமாநில தம்பதியை பொதுமக்கள் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல்,
புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் வழியாக சுற்றுலா வேன் ஒன்று விராலி மலையை நோக்கி சென்றுள்ளது. அந்த வேனை வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஓட்டியுள்ளார். இதில் அவரது மனைவி இருந்துள்ளார். வேன் உள் பகுதியில் இரும்பு பெட்டிகள், சாக்கு மூட்டைகள், கட்டில் உள்ளிட்ட பொருட்களும் இருந்துள்ளன. இந்த நிலையில் அந்த வேனை கண்டு அப்பகுதியில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டு வேனை நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் வேனை நிறுத்தாமல் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் சிலர் தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு போன் செய்து,குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பல் வேனில் சுற்றுவதாகவும், அந்த வேனில் குழந்தைகளை கடத்தி பெட்டியில் அடைத்து வைத்திருப்பதாகவும், அந்த வேன் இலுப்பூரை நோக்கி வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் கூட்டமாக இலுப்பூர் அரசு மருத்துவமனை அருகே காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்திஅவர்களை பிடித்தனர். இதுகுறித்து தகவல் இலுப்பூர் போலீசாருக்கு தெரிந்ததையடுத்து போலீசார் அங்கு வந்து அவர்களையும்,வேனையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது ஏராளமான பொதுமக்கள் இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் இலுப்பூர் கடைவீதி முதல் போலீஸ் நிலையம் வரை பர பரப்பாக காணப்பட்டது.
இதனை தொடர்ந்து இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன், விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன், அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் வேனில் இருந்த அனைத்து பொருட்களையும் கீழே இறக்கி சோதனை செய்தனர். அதில் அவர்கள் மருந்து வியாபாரம் செய்யும் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பல கட்ட விசாரணைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.