துறையூர் அருகே டிராக்டர் மோதி குழந்தை பலி டிரைவர் தப்பி ஓட்டம்
துறையூரில், டிராக்டர் மோதியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கலிங்கமுடையான் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலித் தொழிலாளி. இவரது மகள் காயத்திரி. திருமணமான இவர் கணவருடன் நாமக்கல்லில் வேலை செய்து வருகிறார். அவர்களது குழந்தைகள் சுபஸ்ரீ(வயது 5), அச்சிதா(4) ஆகியோர் தாத்தா வீட்டில் வளர்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 2 குழந்தைகளும் தாத்தா வீட்டின் அருகே உள்ள ஒரு ஷெட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதை பார்த்ததும் சுபஸ்ரீ தப்பி ஓடி விட்டாள். ஆனால் அச்சிதா மீது டிராக்டர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
விபத்தில், குழந்தை இறந்ததை பார்த்ததும் அதன் டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிராக் டர் டிரைவரை தேடி வருகின்றனர்.