தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாணவர்களுக்கு கவிதை,கட்டுரை போட்டி
தமிழ்நாடு பொன்விழா ஆண்டை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை போட்டிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,

போட்டி
தமிழ்நாடு பொன்விழா ஆண்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
விழாவை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழ்மொழியின் வரலாறும், தமிழ் மக்களின் கலாசாரமும் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒப்பிடுகையில் நமது தமிழ் மொழியானது மிகச் சிறந்த இலக்கண வளமும், இலக்கிய வளமும் நிறைந்த மொழியாக விளங்குகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து ‘பிரசிடென்சி ஆப் மெட்ராஸ்’ என்று ஆங்கிலத்திலும், ‘சென்னை மாகாணம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும் என தியாகி சங்கரலிங்கனார் கோரிக்கையை முன் வைத்தார்.
அதன் அடிப்படையில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மூலம் 1967-ம் ஆண்டு அப்போதைய சென்்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வின் 50-வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்மொழியின் சிறப்பையும், நமது கலாசாரத்தின் பெருமையையும் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக’ கொண்டாட அறிவுறுத்திஉள்ளது.
அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை, கலைபண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தமிழ்வளர்ச்சி துறை உதவி இயக்குனர் குமார், முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் நிறுவன முதல்வர் சோமசுந்தரம், ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வள்ளியம்மை, பேராசிரியர் காளஸ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.