தனுஷ்கோடியில் புயலால் அழிந்த கட்டிடங்களை ஆக்கிரமிக்கும் கடைகள்
தனுஷ்கோடியில் புயலால் அழிந்த கட்டிடங்களை சுற்றி கடைகள் ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது புயலால் அழிந்த தனுஷ்கோடி பகுதி. தனுஷ்கோடி பாலம், கம்பிபாடு, எம்.ஆர்.சத்திரம் ஆகிய பகுதிகளில் மீன் பிடி தொழிலை நம்பி ஏராளமான மீனவர்கள் தற்காலிகமாக குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு சேதமடைந்த கட்டிடங்களையும், இடங்களையும் சுற்றுலாபயணிகள் சென்று பார்த்து வர வசதியாக மத்திய அரசின் தேசிய நெடுஞ் சாலைதுறை மூலம் ரூ.50 கோடி மதிப்பில் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரம் கடைக்கோடி பகுதியான அரிச்சல்முனை வரை புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புயலால் அழிந்துபோன கடற்கரை, கட்டிடங்கள் மற்றும் தனுஷ்கோடி சாலையை காண தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் புயலால் அழிந்து போன கட்டிடங்களை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாத அளவிற்கு சாலை ஓரத்தில் வரிசையாகவும், கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட கட்டிடங்களை மறைத்தும், ஆக்கிரமித்தும் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு வருவதே புயலால் அழிந்துபோன கட்டிடங்கள் மற்றும் இடங்களையும் பார்வையிடதான், ஆனால் அந்த இடங்களையும், கட்டிடங்களையும் முழுமையாக மறைத்து ஆக்கிரமித்துள்ள குடிசைகளால் ஆன கடைகளை அப்புறப்படுத்தவேண்டும் அல்லது மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தனுஷ்கோடியில் புயலால் சேதமான கட் டிடங்களை புனரமைப்பு செய்ய பணிகளை விரைவில் தொடங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.