தமிழிசை சவுந்தரராஜனுக்கு கண்டனம்: பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நெல்லை– தென்காசியில் நடந்தது

தமிழிசை சவுந்தரராஜனுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லை– தென்காசியில் பா.ம.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-06-28 21:15 GMT
நெல்லை, 

தமிழிசை சவுந்தரராஜனுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லை– தென்காசியில் பா.ம.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து தவறாக பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தும், அவர் வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை மாநகர மாவட்ட பா.ம.க. தலைவர் சீயோன் தங்கராஜ் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை பொது செயலாளர் அன்பழகன், துணைத்தலைவர் பிச்சையா, துணை பொது செயலாளர் திருமலைகுமாரசாமி, துணை பொது செயலாளர் நிஸ்தார் அலி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மணி, நயினார் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

நெல்லை மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் தென்காசி தாலுகா அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக நீதி போராட்டத்தை தவறாக பேசியதாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தும், சேலம்– சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில துணை பொது செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சேது அரிகரன், மாவட்ட தலைவர் குலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் அய்யம் பெருமாள், மாவட்ட செயலாளர்கள் சீத்தாராமன், ஆனந்த பாபு ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் ராயப்பன், நகர துணை தலைவர் கோபால், கடையம் ஒன்றிய செயலாளர்கள் இசக்கி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்